Sunday, April 22, 2012

இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கு:ஜூலை 31க்கு ஒத்திவைப்பு!

Sunday, April 22, 2012
சென்னை::கடந்த 2009ம் ஆண்டு, டில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வழக்கில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட 12 பேர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று டில்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி விடுமுறை காரணமாக வழக்கு ஜூலை 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் டில்லியில் போராட்டம் நடைபெற்றது. டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் கூடி, இலங்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து அனைவரும் இலங்கை தூதரகத்திற்கு சென்றனர். இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு அங்கு உள்ளவர்களை தாக்கியுள்ளனர். இதையடுத்து கிருஷ்ணசாமி, அவரது உதவியாளர் வி.கே.அய்யர் உட்பட 12 பேர் மீது டில்லி போலீசார், இந்திய தண்டனைச் சட்டத்தின் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நேற்று பாட்டியாலா கோர்ட்டில் நீதிபதி சுதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜராகினர். நேற்று நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு வரும் ஜூலை மாதம் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment