Sunday, April 22, 2012புதுடில்லி::கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் வி.கே.சரஸ்வத், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, எதிர்காலத்தில் ஏவுகணை ஆராய்ச்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவரித்தார்.கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, 5,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் அதிநவீன அக்னி-5 ஏவுகணை, ஒடிசா மாநிலம், வீலர் தீவில் இருந்து கடந்த 19ம் தேதி வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் சரஸ்வத் மற்றும் அக்னி திட்ட இயக்குனர் அவினாஷ் சந்திரா ஆகியோர், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர். 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை குறித்தும், இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் செய்ய வேண்டிய இரண்டு ஏவுகணை சோதனைகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
No comments:
Post a Comment