Sunday, April 15, 2012இலங்கை::பதுரலிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் இருந்த நிலையில் சந்தேகநபர் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்...
மது போதையில் வாகனம் செலுத்திய 137 பேர் கைது!
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் வீதி போக்குவரத்து சட்டங்களை மீறிய வாகன சாரதிகளை கைதுசெய்யும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த 48 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 137 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதிவேகமாகவும், கவனயீனமாகவும் வாகனங்களை செலுத்திய 333 பேர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment