Sunday, April 1, 2012

இலங்கையில் கடந்த ஆண்டில் சுமார் 106 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது!

Sunday, April 01, 2012
இலங்கையில் கடந்த ஆண்டில் சுமார் 106 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளின் வரிசையில் இலங்கை பட்டியல் படுத்தப்படாத போதிலும், மரண தண்டனைகள் விதிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

2011ம் ஆண்டின் நிறைவில் மொத்தமாக 362 பேர் மரண தண்டனையை எதிர்பார்த்து காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மரண தண்டனையை இல்லாதொழிக்குமாறு அரசாங்கத்திடம் கோர உள்ளதாக தேசிய மனித உரிமைப் பேரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்திருந்தது.

எவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்பதே சர்வதேச மன்னிப்புச் சபையின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

மரண தண்டனையானது மனிதனின் வாழும் அடிப்படை உரிமையை முடக்கும் வகையில் அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றும் நபர்களுக்காக அண்மையில் சிறைச்சாலைகள் அமைச்சு விண்ணப்பங்களை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment