Sunday, April 1, 2012

வடமராட்சி துன்னாலைப் பகுதியியில் முன்னாள் புலிபோராளியின் குழந்தையை கடத்தும் முயற்சி முறியடிப்பு!

Sunday, April 01, 2012
இலங்கை::வடமராட்சியின் துன்னாலைப் பகுதியியில் புலிகளது முன்னாள் பெண் போராளியொருவரது இரண்டரை வயதேயான ஆண் குழந்தையொன்றை கடத்த மேற்கொண்ட முயற்சியொன்று இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் கடற்புலிகளது அமைப்பின் அரசியல் பிரிவு முக்கியஸ்தராக இருந்த குறித்த பெண் போராளி இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது காயமடைந்து அங்கவீனமுற்றுள்ளார். அவரது கணவரும் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை குறித்த கடத்தல்கார சந்தேக நபர்கள் இப்பெண் போராளியின் வீட்டிற்கு சென்று தமிழ் அரசியல் கட்சியொன்றின் பிரமுகர் பெயரினை குறிப்பிட்டு குழந்தையினை அவர் அழைத்து வருமாறு தம்மிடம் பணித்துள்ளதாகவும் அருகிலுள்ள சந்திப்பகுதியினில் அவர் வாகனத்துடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

எனினும் இவர்களது நடவடிக்கைகளினில் சந்தேகம் கொண்ட அம்முன்னாள் பெண் போராளி தொலைபெசியிடாக குறித்த தமிழ் அரசியல் கட்சியின் பிரமுகருடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளார்.

எனினும் அவ்வாறு தான் யாரையும் அங்கு அனுப்பியிருக்கவில்லை எனவும் தனக்கு குறித்த குழந்தையை கூட தெரிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தங்களது திருட்டுத் தனம் அம்பலமானதையடுத்து சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சம்பவத்தையடுத்து அப்பகுதி கிராம சேவையாளர் சகிதம் நேரில் குறித்த வீட்டிற்கு சென்ற அத்தமிழ் அரசியல் கட்சி; பிரமுகர் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.

அத்துடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் போராளியினை கொண்டு முறைப்பாடொன்றையும் அவர் செய்வித்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண் போராளியினை தான் ஏற்கனவே அறிந்திருந்தாகவும் அவரது சகோதரியொருவர் தமது ஆதரவாளராக இருந்து வருவதாகவும் குறித்த அரசியல் கட்சி; பிரமுகர் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பெண் போராளியினது குடும்ப சூழலை கருத்தினில் கொண்டு புலம்பெயர் நண்பர்கள் சிலர் மூலம் தான் தன்னால் இயன்ற உதவிகள் சிலவற்றை செய்து வழங்கியிருந்தமையினையும் சுட்டிக்hட்டியுள்ளார். குறித்த கடத்தல் முயற்சி அப்பகுதிகளினில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment