Friday, March 2, 2012

ஐ.நா மனித உரிமைப் பேரவை, இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்தும் - நவனீதம்பிள்ளை!

Friday, March 02, 2012
ஜெனிவா::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை விவகாரம் குறித்துகவனம் செலுத்தும் என பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினால் பரிந்துரைசெய்யப்பட்ட சில விடயங்கள் குறித்து இன்னமும் கவனம் செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என்றபோதிலும், குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளார்.

நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கங்களின்முதன்மைக் கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் இலங்கை அமுல்படுத்த வேண்டும்-மரியா ஒட்ரோ!

ஜெனிவா::இலங்கை தனக்கான காலத்தை நழுவ விட்டுள்ளதாக அமெரிக்காவின் பொதுமக்கள் காப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான செயலர் மரியா ஒட்ரோ சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் இலங்கை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக்க கட்டப் போர் நிறைவுற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது இலங்கை உடனடியாக ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயலில் கொண்டுவர வேண்டும் எனவும் மரியே தெரிவித்தார்.

No comments:

Post a Comment