Friday, March 2, 2012

கர்நாடக மாநில கோர்ட்டில் வக்கீல்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலி:பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை!

Friday, March 2, 2012
பெங்களூரூ::கர்நாடக மாநில கோர்ட்டில் வக்கீல்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கனிம சுரங்க மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி ஆஜர்படுத்த வரும்போது , அங்கே கூட்டமாக நின்று கொண்டிருந்த வக்கீல்கள், பத்திரிகையாளர்களை தாக்கினர். இதில் பலர் காயமுற்றனர். சம்பவத்தை கண்டு தடுத்த போலீஸ்காரர்கள் மீதும் , தாக்குதல் நடத்திய சம்பவம் வக்கீல்கள் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா மீது சொத்து குவிப்பு வழக்கு நடக்கும் கோர்ட் வளாகத்தின் அருகில்தான் இந்த சம்பவம் நடந்தது. இதனால் அவர் கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்புக்குள்ளானார். இவரது வழக்கும் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது. அடுத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் சதானந்த கவுடா உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆந்திர, கர்நாடக எல்லை பகுதியில் சுரங்கம் தொழில் நடத்தி இங்குள்ள அரசிலையே கைக்குள் வைத்திருந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். இவர்கள் முறைகேடாக அரசு சுரங்கத்தை பெற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பது வெளி உலகிற்கு தெரிய வந்ததும் சி.பி.ஐ.,வ ழக்கு பதிவு செய்து இவர்களை கைது செய்தது. இதில் சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று காலையில் ஜனார்த்தன ரெட்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். இந்நேரத்தில் அழைத்து வருவதை படம் எடுக்க, பத்திரிகை மற்றும் புகைப்படக்காரர்கள் கூட்டமாக காத்திருந்தனர். பலரும் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது , கோர்ட்டில் இருந்த வந்த வக்கீல்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். வக்கீல்களை குண்டாஸ் என்று எழுதும் நீங்கள் கோர்ட்டுக்குள் வரக்கூடாது என்றனர். தொடர்ந்து படம் எடுக்கவும் வக்கீல்கள் பத்திரிகையாளர்களை கடுமையாக திட்டினர். தொடர்ந்து சிலரை அடித்தனர். கற்களால் வீசி தாக்கினர். இதனையடுத்து அந்த பகுதி பெரும் களேபரமானது. பத்தரிகையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயினர்.

தொடர்ந்து பத்திரிகை வாகனங்கள் , டி,வி,. காமிராக்கள், சேட்லைட் கருவிகள் நொறுக்கப்பட்டன. போலீசார் தடுத்த போது வக்கீல்கøள் போலீசையும் தாக்கினர் .நிலை‌மை கட்டு மீறி போகவே போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவத்தில் பல பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. கோர்‌ட் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசார் மற்றும் பத்திரிகையாளர் வாகனங்களை வக்கீல்கள் தீ வைத்து கொளுத்தினர்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; கண்டனம் குவிகிறது: பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட வக்கீல்களின் தாக்குதலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக முன்னாள் தலைமை நீதிபதி சைதானா , சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, லோக்அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ்ஹெக்டே உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், வக்கீல்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

முதல்வர் அவசர ஆலோசனை: கோர்ட் வளாகத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்ந்து முதல்வர் சதானந்த கவுடா அவசர ஆலோனையில் ஈடுபட்டார். விதான் சவுதாவில் நடக்கும் இந்த கூட்டத்தில் உள்துறை, போலீஸ் துறையினர் பங்கேற்றனர். மறுபுறம் வக்கீல் சங்க பிரதிநிதிகள் அடுத்து என்ன செய்வது என ஆலோசிக்கும் கூட்டமும் நடத்தப்பட்டது. மதியமும் ஒரு முறை தடியடி நடந்தது. தொடர்ந்து வன்முறை நிகழாமல் இருக்க கோர்ட் வளாகம் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய கண்டனம் எழுந்துள்ளது.வன்முறை நடந்த காரணத்தினால் சொத்து குவிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜரான சசிகலா வழக்கு ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்டட்டது. தொடர்ந்து 3 மணிக்கு விசாரணை முடிந்த பின்னர் சசிகலா சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இந்த வழக்கு வரும் 7 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சேர் தாக்குதலில் பலியான போலீஸ்காரர் : கோர்ட் வளாகத்தில் நடந்த மோதலில் கர்நாடக மாநில ரிசர்வ் போலீசார் ஒருவர் பலியானார். மகாதேவய்யா என்ற அவர் மீது , வக்கீல்க் சேர் கொண்டு தலையில் அடித்து தாக்கினர். இதில் படுகாயமுற்ற அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார். போலீசார் மரணமடைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment