Friday, March 02, 2012இலங்கை::சீனாவின் பிரசன்னத்தை இந்தியா அசௌகரியமாக கருதக் கூடாது என ஆளும்ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்கதெரிவித்துள்ளார்.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போதியளவு சந்தர்ப்பம் காணப்படுவதாகக்குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை, இந்தியா தனித்து உரிமை பாராட்ட முடியாது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இலங்கை மிக நெருங்கியதொடர்புகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புவியியல் அமைவிடம் சீனா மற்றும் இந்தியா ஆகியநாடுகளுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களினால்இந்தியா வருத்தமடைய வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுமாறு முதலில்இந்தியாவிடமே கோரப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment