Thursday, March 22, 2012இலங்கை::படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் முன்னாள் புலி உறுப்பினர்கள் உயிருடன் இருக்க முடியுமா - இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரி கேள்வி:-
படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால், முன்னாள் புலி உறுப்பினர்கள் உயிருடன் இருக்க முடியுமா என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுமார் 12 ஆயிரம் முன்னாள் புலிபோராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் தாய், தந்தை, சூசை மற்றும் தமிழ்ச் செல்வத்தின் குடும்பத்தினர் என பலருக்கு படையினர் அடைக்கலம் வழங்கியிருந்தனர்.
திட்டமிட்ட வகையில் படையினர் பொதுமக்கள் மீது துன்புறுத்தல்களை மேற்கொள்ளவில்லை. புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தினர். இலட்சக் கணக்கான பொதுமக்களை மிகவும் மனித நேயத்துடன் படையினர் மீட்டெடுத்தனர்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என மட்டக்களப்பில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment