Thursday, March 22, 2012இலங்கை::பயங்கரவாத அச்சுறுத்தல் முற்று முழுதாக இல்லாது ஒழிக்கப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆயிரக் கணக்கான புலி உறுப்பினர்கள் தப்பிச் சென்றதாகவும், பெருமளவிலான ஆயுதங்கள் தொடர்ந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பயங்கரவாத அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக நீங்கியதாக கருத முடியாது என அவர் அறிவித்துள்ளார்.
எனினும், புலிகள் மீள இயங்க மேற்கொள்ளும் முயற்சிகள் முறியடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனின் மரணத்துடன் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டு விட்டதாக சிலர் பிழையாக கருதுகின்றனர் எனவும், உண்மையில் யுத்தம் முடிவடைந்தது முதல் பல தடவைகள் புலிகள் மீள இயங்க எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகவும், யுத்த வலயங்களுக்கு எவ்வித தடையுமின்றி பயணம் செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதம் ஏந்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment