Tuesday, March 20, 2012

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புலி சந்தேகநபர் மீது வழக்குத் தாக்கல் செய்ய சிங்கப்பூர் அரசின் உதவி தேவை!

Tuesday, March 20, 2012
இலங்கை::கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் மீது வழக்குத் தாக்கல் செய்ய சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குணசுந்தரம் ஜயசுந்தரம் என்பவர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்தபோது அரச சட்டத்தரணி சட்ட மா அதிபர் சார்பில் இவ்வாறு அறிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்றபோது சிங்கப்பூரில் இருந்து கொண்டு புலிகளுக்கு ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகநபர் மீது அரச சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளின் வர்த்தகக் கப்பளை இவர் நடத்திச் சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிங்கப்பூர் அரச சட்ட மா அதிபரிடம் தகவல் கோரியுள்ள போதும் இன்னும் அது கிடைக்கப்பெறவில்லை என அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களை பரிசீலித்த நீதிமன்றம் சந்தேகநபர் மீது வழக்குத் தாக்கல் செய்ய செம்டம்பர் 13ம் திகதிவரை கால அவகாசம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment