Tuesday, March 20, 2012

அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு மதிப்பளி;க்கப்படவில்லை – தினேஷ் குணவர்தன!

Tuesday, March 20, 2012
இலங்கை::அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஆதரவளிக்காமை ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஆதரவு தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு எந்த வகையிலும் உதவ முடியாது என்பதனை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும், சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தாலும், தீர்மானத்தை தோற்கடிக்க முடியும் என அமைச்சர் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சரியாக சிந்திக்கும் சகல நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தரப்பினருடனும் கூட்டணி சேருவதில்லை என்பதே அரசாங்கத்தின் பிரதான கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment