Tuesday, March 20, 2012இலங்கை::பயங்கரவாத அமைப்புடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்தம் அல்லது புலி உறுப்பினர்கள் சரணடைவது ஆகிய விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நேரடியாக தலையீடு செய்வதனை ஏற்க முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக அமைந்திருந்தது.
யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் புலிககளை விடுதலை செய்வார்கள் என்பதனை நிச்சயமாக குறிப்பிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறுத்தமொன்றை அறிவித்தால் அதனை புலிகள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.
உணவு, நீர் விநி;யோகம் போன்றவற்றை கருத்திற் கொண்டு குறுகிய கால யுத்த நிறுத்தங்களை அறிவிக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொள்ளாது யுத்தம் முன்னெடுக்கப்பட்டால் சர்வதேச ரீதியான அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடும் என இலங்கை அரசாங்கத்திற்கு ராஜதந்திரிகள் அறிவித்திருந்தனர் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
(colombo telegraph)
No comments:
Post a Comment