Wednesday,March,21,2012இலங்கை::கோட்டைப் பகுதியிலுள்ள விகாரையொன்றில் பணியாற்றிய இரண்டு தேரர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பிட்டிகல ஜீனரத்ன தேரரும் பொரலஸ்கமுவ குணரத்ன தேரரும் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
விகாரைக்கு வாகனமொன்றில் வருகை தந்த குழுவினர் தேரர்களை கொலை செய்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீதவான் விசாரணைகளை அடுத்து சடலங்கள் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலைகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment