Wednesday,March,21,2012அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளும் காலம் கடந்து விட்டதாக நோர்வே அரசாங்கம், புலிகளுக்கு அறிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கச் செயலாளருக்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் நோர்வே தீவிர முனைப்பு காட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் முயற்சிக்கு ஆதரவளிக்கப்பட வேண்டுமெனவும், இந்த விடயம் மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு வெளிப்படுத்தக் கூடாது எனவும் பிளக் கோரியிருந்தார்.
நோர்வேயின் திட்டம் குறித்து புலிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் எவ்வாறு பொதுமக்களை வெளியேற்றுவார்கள் என புலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசியல் தீர்வுத் திட்டத்திற்காக யுத்த நிறுத்தம் செய்யும் காலம் கடந்து விட்டதாகவும், பொதுமக்களை பாதுகாப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும் எனவும் நோர்வே புலிகளுக்கு அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், நோர்வேயின் முயற்சிகள் குறித்து இலங்கை அரசாங்கம் சந்தேகம் கொண்டிருந்ததாக பிளக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெறும் வலயத்தை விட்டு வெளியேற மக்கள் விரும்பவில்லை என புலிகள் வெளியிட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. சாட்சியங்கள் மாறுபட்ட தகவலையே வெளிப்படுத்துகின்றது. தப்பிச் செல்ல முற்பட்ட பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பலர் தப்பிச் சென்றுள்ளனர்' என பிளக் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இடம்பெயர் மக்களுக்கு உரிய நிவாரணங்களையும் பாதுகாப்பையும் வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க Nவுண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment