Wednesday, March 21, 2012

உயர்மட்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்!

Wednesday,March,21,2012
உயர்மட்ட கனேடிய பாராளுமன்றக் உறுப்பினர் குழுவொன்று இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் இந்த அறிவி;ப்பை விடுத்துள்ளார்.

நல்லிணக்கப் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தப் பாராளுமன்றக் குழுவினரின் விஜயம் அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிக் டிக்ட்ஸ்ரா மற்றும் கிறிஸ் அலெக்சான்டர் ஆகியோரே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இலங்கையுடனான தொடர்புகளை எவ்வாறு பேண வேண்டும் என்பது தொடர்பிலான உண்மையைக் கண்டறியும் ஓர் விஜயமாகவும் இது அமையும் என வெளிவிவகார அமைச்சர் பெயார்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பாக இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமைகளை நேரில் பார்வையிட்டதன் பின்னர் இலங்கை மீது கனடா அழுத்தங்களை பிரயோகிக்காது என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment