Tuesday, March 20, 2012

இந்தியாவின் தீர்மானத்தை இலங்கை மதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

Tuesday, March 20, 2012
இலங்கை::இந்தியாவின் தீர்மானத்தை இலங்கை மதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து இந்தியா என்ன நிலைப்பாட்டை கொண்டாலும் அதனை இலங்கை அரசாங்கம் மதிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சிப்பதாகவும், இதற்கு இந்தியா பெரும்பாலும் ஆதரவளிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசாங்கம் எவ்வாறான தீர்மானத்தை எடுத்தாலும் அதற்கு மதிப்பளிக்கப் போவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரட்ன அமுனுகம தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment