Tuesday, March 20, 2012இலங்கை::புலம்பெயர் தமிழர்களின் தேவைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குரல் கொடுத்து வருவதாக, கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர், வலுவான ஓர் எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டியுள்ளது. ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் மடியில் இருக்கின்றார்.
புலம்பெயர் புலி உறுப்பினர்களுக்கு தேவையான கருத்துக்களையே ரணில் வெளியிடுகின்றார். இவ்வாறான நடவடிக்கைகளினால் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளர் பலம் மேலும் பலவீனமடையும்.
மே தினக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கும் முயற்சி சிங்கள வாக்காளர்களை விட்டு விலகிச் செல்ல நேரிடும்.
ரணில் விக்ரமசிங்க ஓர் காலாவதியான பண்டமாகவே நோக்கப்பட வேண்டும். அவரை மக்களிடம் விற்பனை செய்ய முடியாது என மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.
போர் பற்றிய ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்களேä, கட்சியிலிருந்து மக்கள் விலகக் காரணமாக அமைந்தது. நாரஹென்பிட்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment