Friday, March 2, 2012

கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

Friday, March 02, 2012
இலங்கை::கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இருவருக்கு கேகாலை பிராந்திய மேல்நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி குற்றவாளியாக காணப்பட்டார்.

தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகாது தலைமறைவாகியிருந்த குற்றவாளிக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ருவன்வெல்ல மடவல பகுதியில் ஒருவரை தடிகளால் தாக்கி, எரியூட்டி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேலும் ஒருவருக்கும் கேகாலை பிராந்திய மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment