Friday, March 02, 2012அருமனை::அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க தலைவர் உதயகுமாரின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தி இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் அருமனை மற்றும் மஞ்சாலுமூடு இளைஞர் காங்கிரசார், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க தலைவர் உதயகுமாரின் உருவபொம்மையை அருமனை சந்திப்பு பகுதிக்கு எடுத்து வந்தனர். கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருவதை கண்டித்து இளைஞர் காங்கிரசார் கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் உதயகுமார் உருவபொம்மையை தீயிட்டு எரித்துவிட்டு சென்றனர்.
No comments:
Post a Comment