Friday, March 2, 2012

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் கைது!

Friday, March 02, 2012
இலங்கை::இலங்கை மீனவர்கள் ஐவருடன் பயணித்த படகொன்று இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பபட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து தொழிலுக்காக சென்ற மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகிறது.

கடல் எல்லையை மீறியதன் காரணமாக கடந்த 28 ஆம் திகதி ஆந்திரா பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளை பகுதியில் இருந்து தொழிலுக்காக சென்ற ஐந்து மீனவர்களும் அவர்கள் பயணித்த படகொன்றும் இதற்கு முன்னர் இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பபட்டிருந்தது.

குஜராத் மாநிலத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது. அதன் பிரகாரம் 10 இலங்கை மீனவர்களும் இரண்டு படகுகளும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment