Friday, March 2, 2012

மக்கள் போராட்டம், முட்டை வீச்சு.. பாருக்குள் பாய்ந்து தப்பிய சர்கோஸி!!

Friday, March 02, 2012
பேயான்::பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் பிரச்சாரம் செய்யச் சென்ற அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் சார்கோஸிக்கு எதிராக மக்கள் கோஷமிட்டதாலும், அவர் மீது முட்டையை வீசியதாலும் அவர் அருகில் உள்ள ஒரு பாரில் தஞ்சம் புகுந்தார்.

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸி நாட்டின் தென்மேற்கு பகுதியான பேயனிற்கு பிரச்சாரத்திற்கு சென்றார். அவர் வருவது பற்றி அறிந்த பாஸ்க் தனி நாடு கோருபவர்களும், மக்களும் அங்கு கூடிவிட்டனர். சார்கோஸி காரில் இருந்து இறங்கியவுடன் அங்கிருந்தவர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், முட்டைகளை வீசியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அவர் அப்பகுதியில் உள்ள பார் டு பாலைஸில் வைத்து உள்ளூர் வாக்காளர்களை சந்தித்து பேசுவதாக இருந்தது. அவர் பாரை அடையும் வரை எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர். எதிர்ப்பாளர்களை போலீஸார் கலைந்து போகச் செய்யும் வரை அவர் பாருக்குள் சுமார் 1 மணி நேரம் இருந்தார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர் இது எதிர்கட்சியினரின் சதி என்று குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை எதிர்கட்சியினர் மறுத்துள்ளனர்.

No comments:

Post a Comment