Wednesday, March 21, 2012

ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் நாகப்பட்டினத்தில் கைது!

Wednesday,March,21,2012
நாகப்பட்டினம்::ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் நாகப்பட்டினத்தில் கைது:-

ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்றைய தினம் நாகப்பட்டினத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜன் என்று அழைக்கப்படும் சவுந்தர்ராஜன் என்ற 43 வயதுடைய அவர், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தமிழக விசாரணை பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் இருந்து செய்மதி தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அவர் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார்.

No comments:

Post a Comment