Wednesday,March,21,2012இலங்கை::மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மற்றுமொரு ரயிலின் பெட்டி மோதியுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் வேகத்தடை செயலிழந்தமையால் அதனைத் தள்ளிச் சென்று ஓடுபாதையில் நிறுத்துவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தாத ரயில் பெட்டி ஒன்றுடன் மோதியதாக ரயில்வே திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதனால் அண்மையிலிருந்த மதிலொன்று உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.
களுவாஞ்சிக்குடியில் விபத்து; 9 பேர் படுகாயம்!:-
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குருக்கள் மடம் பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெறும் போது வேனில் 15 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான, நல்லதண்ணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்று இன்று காலை 6.30 மணிக்கு விபத்துக்குள்ளாகியது.
இந்த பஸ்ஸில் 60ற்கும் மேற்பட்டோர் பயணித்திருந்த போதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment