Wednesday, March 21, 2012

சிங்கப்பூருக்கு எடுத்துச்செல்ல முயன்ற 28 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல்!

Wednesday,March,21,2012
இலங்கை::சிங்கப்பூருக்கு எடுத்துச்செல்ல முயன்ற 28 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செல்லப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து 40 வயதான இந்தியர் ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 11.40 மணியளவில் சிங்கப்பூருக்கு எடுத்துச்செல்வதற்காக ஸ்ரேலிங் பவுண்ஸ், அமெரிக்க டொலர்;, ஜப்பானிய யென் மற்றும் கனேடிய டொலர்கள் என்பன மேற்படி நபரின் பயணப்பையில் இருந்ததாகவும் சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment