Thursday, March 22, 2012இலங்கை::கோட்டே ரஹமகா விகாரையின் பிக்குகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவத்தின் இந்த பிரதான சந்தேகநபர், விசேட பொலிஸ் குழுவினரால் தணமல்வில பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
21 வயதான இந்த சந்தேகநபர் சுமார் மூன்று வருடங்களாக பிக்குவாக இருந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதுதவிர இந்த சம்பவத்தில் பிரதான சந்தேகநபருக்கு துணையாகவிருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
குறிப்பாக சம்பவத்தின்போது அங்கிருந்த ஒருவரால் மிகவும் புத்தி சாதூரியமான தரையில் வாகன இலக்கமொன்று குறிப்பிடப்பட்டிருதமையே இது தொடர்பாக விசாரணைகளை சிரமமின்றி முன்னெடுக்க முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறான பங்களிப்புகள் மிக முக்கியமானதாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் போது மக்கள் வழங்கிய ஒத்துழைப்பினை வரவேற்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
2 கிலோ கஞ்சாவைக் கொண்டு சென்றுகொண்டிருந்த இரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைது!
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சீருடையில் மோட்டார் சைக்கிளில் 2 கிலோ கஞ்சாவைக் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக விசேட பிரிவினரால் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பஹரிய 15ம் மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த சாலியவெவ மற்றும் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுகின்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே கைதுசெய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இவர்களை புத்தளம் தில்லையடிப் பிரதேசத்தில் சோதனைக்குட்படுத்தியபோது, 2 கிலோ கஞ்சாவுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இச்சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவரும் புத்தளம் பொலிஸார், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்
No comments:
Post a Comment