Wednesday, March 21, 2012

மனித உரிமைகளைப் பற்றியோ, மனிதாபிமானம் பற்றியோ குரல் கொடுத்து பேசுவதற்கு அமெரிக்காவுக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது!

Wednesday,March,21,2012
ஜெனீவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்துள்ள பிரேரணையானது இல ங்கையில் வாழும் தமிழ் மக்களையோ மனித உரிமை களையோ சார்ந்த செயற்பாடல்ல. முழுக்க முழுக்க தனது நலனை இலக்காகக் கொண்டதென்பதை எவரும் மறந்துவிட கூடாது.

மனித உரிமைகளைப் பற்றியோ, மனிதாபிமானம் பற்றியோ குரல் கொடுத்து பேசுவதற்கு அமெரிக்காவுக்கு எந்தவொரு அருக தையும் கிடையாது. இலங்கை மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முற்பட்ட அமெரிக்கா, அது நிறைவேறாமல் போனதும், மூக்கை நுழைப்பதற்கு மாற்று வழியில் முயல்கின்றது. அதன் வெளிப்பாடே ஜெனீவா பிரேரணை. நாடுகளை தனது ஆதிக் கத்திற்குள் கொண்டு வருவதற்கு உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் அமெரிக்கா இலங்கை மீது குற்றம் சுமத்த முயல்வது வெறும் அபத்தமாகும்.

ஈராக் துவம்சம் செய்யப்பட்டுவிட்டது. அமெரிக்க படைகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அனைத்துமே மூடி மறைக்கப்பட்டு விட்டன. அதே அமெரிக்காவினால் ஆப் கானிஸ்தான் மீது நடந்து கொள்ளும் விதம் பெரும் கவலைக் குரியது. வீடொன்றில் புகுந்து கொலை வெறியாடிய அமெரிக்க சிப்பாய் ஒருவன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரை சுட் டுக் கொன்றான்.

ஆப்கானிஸ்தான் மக்கள் கொதித்தெழுந்தனர். விடயம் அம்பலத்தி ற்கு வந்ததும் சிப்பாயை கைது செய்த அமெரிக்க நிர்வாகம் விசா ரணைக்கு அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது.

மனித உயிர்களுக்கும் மனிதாபிமானத்திற்கும், மனித உரிமைகளுக் கும் அமெரிக்கா மதிப்பளிக்கும் ஒரு நாடு என்றால் கொலை யாளியை (சிப்பாயை) ஆப்கானிஸ்தானிலேயே அந்த நாட்டு சட்டங்களுக்கு அமைய விசாரணைகளுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். மாறாக தனது வீறாப்புத்தனத்தை உலகுக்கு வெளிப் படுத்தியிருக்கிறது.

ஆகவே, அமெரிக்காவின் செயற்பாடு சுய நலம் சார்ந்தது என்பது நிரூபணம். நல்லிணக்க ஆணைக்குழு வின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேளை யில் அதனை அமுல்படுத்த வேண்டுமென ஜெனீவாவில் பிரே ரணை கொண்டு வருவதற்கு அமெரிக்காவுக்கு எந்த யோக்கியமும் கிடையவே கிடையாது.

இறைமையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை என்பதை அது முதலில் விள ங்கிக்கொள்ள வேண்டும். அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் தனது ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக மேற்கொண்டுவரும் தற்போதைய முயற்சிகள் தமிழர்களுக்கு எந்த வகையிலும் உத வப் போவதில்லை.

1956ல் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 56 வருடங்கள் கடந்து விட்ட இன்றைய சூழ்நிலையில், தமிழ் மொழிக்கு அரசாங்கம் சிறந்த முறையில் உரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளது. ஆரம்ப கட்டம் முதல் தமிழ்த் தலைவர்கள் எதிரும் புதிருமாக இருந்துள்ளார்கள். தமிழ் தலைவர்களும் சிங்கள முற்போக்குவாதிகளும் சேர்ந்து செயற்பட்டிருந்தால் தமிழனத் தின் நிலை இவ்விதம் இன்று இருந்திருக்காது.

மேற்கத்திய நாடு கள் உண்மையாகவே இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியமைக்க வேண்டுமென்று விரும்பினால் அநாவசியமான தலையீடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வல்லரசுகளின் விளையாட்டின் மூலம் நாம் பல தடவைகள் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கிறோம். இந்த பிரேரணை மூலம் இந்நாட்டில் தலையிடுவதையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறைமை யையும் பறிக்க வல்லரசுகள் எத்தனிக்கலாகாது.

இதன் மூலமே மக்களின் உரிமையை பாதுக்காக்க முடியும். யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் இருந்த அப்பாவி முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈ. விரட்டியடித்தனர். அத்தோடு புலிகளின் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைக்காத தமிழ் மக்களைக் கூட அவர்கள் சுட்டுக் கொன்று வெளியேற்றினர். இது பகிரங்க இரகசியம். காத்தான்குடி பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கண க்கான முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற போது, இன்று மனித உரிமை பேசும் அமெரிக்காவோ வேறு எந்த வல்லரசுகளோ ஒருவார்த்தை கூட கண்டனமாக தெரிவிக்கவில்லை.

இந்நாட்டு மக்களின் பேரபிமானத்தை பெற்றுள்ள ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்கள் இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு யதார்த்த பூர்வமான நடவடிக்கை எடுக்கின்ற போது அமெரிக்காவும் ஏனைய வல்லரசுகளும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றன.

இலங்கை நாட்டின் இனப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய ஒரே ஒரு தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான். அவருக்கு மாத்திரமே இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும். ஜனாதிபதியின் இந்த சமாதான முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் தீங்கிழைக்க எத்தணித்தால் நிச்சயம் பல்லாண்டுகளுக்கு இலங்கையில் இந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment