புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மரண தண்டணை விதித்த இந்தியாவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதாக எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மேலைத்தேய நாடுகளும் இன்று பயங்கரவாதம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டதன் பின்னர் அதனை ஒரு போர்க்குற்ற மாககூறுகின்றன-பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!
Wednesday,March,21,2012இலங்கை::புலிகளின் தலைவர் பிர பாகரனுக்கு மரண தண் டணை விதித்த இந்தியா வும், பயங்கரவாதத்தை ஒழிப்பதாக எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மேலைத்தேய நாடுகளும் இன்று பயங்கரவாதம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டதன் பின்னர் அதனை ஒரு போர்க்குற்ற மாக கூறுகின்றன.
புலிகள் பயங்கரவாத அமைப்பு என முதலில் தடைசெய்தவர்கள் இந் தியா. அதன் பின்னர் தான் மேலைத்தேய நாடுகளும் புலிகள் அமைப்பை தடை செய்தன.
புலிகளுக்கு பலதடவைகள் சந்தர்ப்பம் வழங்கி, வழங்கி இறுதியாகவே இலங்கை புலிகள் அமைப்பைத் தடைசெய்தது என மீள்குடி யேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பிரபாகரன் அழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பின்னர் இன்றுவரை ஒரு வேட்டுச்சத்தம் இல்லை.
ஈராக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள், லிபியத் தலைவர் கேணல் கடாபி தெருத்தெருவாக இழுத்துச் சென்று சுட்டுக்கொல்லப்பட்டார். மனித உரிமை கள் வெகுவாக மீறப்பட்டன. விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டார்கள். அது தவறுதலாக நடைபெற்றது என பூசி மெழுகிவிட்டார்கள். இவ்வாறு செய்தும் அங்கு பயங்கரவாதம் முடிவுக்கு வரவில்லை. இன்னமும் வெடித்துக் கொண்டுதான் உள்ளது.
எமது நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். மீன்பிடி, விவசாயம், கட்டட நிர்மாணத்துறை, வர்த்தகம் என வடக்கிலும், கிழக்கிலும் களைகட்டுகிறது.
எமது நாட்டில் மேலைத் தேய நாடுகள் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்தத் தருணத்தில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். சகித்துக்கொள்ள முடியாத சர்வதேச சக்தி கள்தான் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக் கின்றன. அனைத்து அரசியல்துறைகளிடமும் நான் வேண்டிக்கொள்வது இந்தத் தருணத்தில் விழிப்பாக பெருக்கவேண்டிய காலகட்டம்.
நாம் ஜெனீவா அமைப்புக்கு எதிரானவர் கள் அல்ல. ஐ.நா.வுக்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் அவற்றில் அங்கம் வகிப்பவர்கள். ஆனால் இன்று எமக்கு எதிராக எழுந்திருக்கும் பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டும். நாம் ஒற்று மையாக இங்குள்ள நிலைமையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
நீரியல்வள உற்பத்திகள் அதிகாரசபையின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்ப தற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment