Wednesday, March 21, 2012

அரியலூர் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: திருச்சி மகிளா கோர்ட்டில் 4 பாதிரியார்கள் "ஆஜர்'!

Wednesday,March,21,2012
திருச்சி::கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ்மேரியை கற்பழித்து, கொலைமிரட்டல் விடுத்த வழக்கு விசாரணைக்காக, திருச்சி மகளிர் கோர்ட்டில், நான்கு பாதிரியார்கள் ஆஜராகினர்.

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக இருந்தவர், ராஜரத்தினம். இவர் மீது, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ப்ளாரன்ஸ்மேரி என்ற கன்னியாஸ்திரி, 2010ம் ஆண்டு டிசம்பரில், கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கற்பழிப்பு புகார் அளித்தார். அந்த புகாரில், பாதிரியார் ராஜரத்தினம், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, தன்னை கற்பழித்து விட்டதாகவும், அதை தட்டிக்கேட்ட போது, இயேசு சபை தலைவர் தேவதாஸ், பாதிரியார்கள் சேவியர் வேதம், ஜோ சேவியர் ஆகியோர், கொலை மிரட்டல் விடுத்தாகவும் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில், பாதிரியார்கள் ராஜரத்தினம், தேவதாஸ், சேவியர் வேதம், ஜோ சேவியர் உள்ளிட்ட, ஐந்து பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திருச்சி செஷன்ஸ் கோர்ட்டிலிருந்து, சமீபத்தில் தான், மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இங்கு வழக்கு விசாரணை, கடந்த சில நாட்களுக்கு முன், நடக்கவிருந்தது. ஆனால், பாதிரியார்கள் யாரும் வரவில்லை என்பதால், வழக்கு விசாரணை, மார்ச் 20 க்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, நேற்று திருச்சி மகளிர் கோர்ட்டில், பாதிரியார்கள் ராஜரத்தினம், ஜோ சேவியர், சேவியர் வேதம், தேவதாஸ் உள்ளிட்ட ஐந்து பேர், ஆஜராகினர். அவர்களிடம், "உங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா?' என, நீதிபதி மாயாண்டி கேட்டார். அதற்கு அனைவரும், குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை, ஏப்., 10 க்கு, நீதிபதி மாயாண்டி ஒத்திவைத்தார். ஏற்கனவே, "ப்ளாரன்ஸ்மேரி வழக்கில் இன்னும் சிலரை சேர்க்க வேண்டும் என்பதற்காக, வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக காத்திருப்பில் உள்ளது.

No comments:

Post a Comment