Wednesday, March 21, 2012

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றப் பிரேரணையைக் கண்டித்து நேற்றுக் கொழும்பிலும்,அண்டிய பல பிரதேசங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!



Wednesday,March,21,2012
இலங்கை::ஜெனீவா மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றப் பிரேரணையைக் கண்டித்து நேற்றுக் கொழும்பிலும் கொழும்பை அண்டிய பல பிரதேசங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பல்வேறு துறை சார்ந்த அமைப்புக்கள் கண்டனப் பேரணிகளை நடத்தி வருவதுடன் பல்லாயிரக்கணக்கான மக் கள் இதில் கலந்து கொண்டு கண் டனக் குரல்களை எழுப்பி வருகின் றனர்.

நேற்றைய தினம் கொழும்பு கெம்பல் பூங்காவில் நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு மாபெரும் கண்டனப் பேரணியொன்றை நடாத்தியதுடன் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் வரை சென்று மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

அதேவேளை; நேற்றுப் பிற்பகல், சுதந்திர ஊடக அமைப்புகள் ஒன்றி ணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. இதில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் உட்பட பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் சனல் - 4க்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதோடு புலிகளின் கடந்தகால படுகொலைகளையும் கண்டித்து குரல் எழுப்பினர்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங் களில் அமெரிக்கா தலையீடு செய்வதற்கு கண்டனம் தெரிவிக்கும் கோஷங்களும் அங்கு எழுப்பப்பட்டன.

தாய்நாட்டுக்குத் துரோகமிழைக்கும் வகையில் ஐ.தே.க. செயற்படுவதாக கண்டிக் கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டோர் சுலோகங்களைத் தாங்கியிருந்தனர்.

இதேவேளை அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து வேட்டையும் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தின் அருகேயுள்ள மேடைப் பகுதியில் பாரிய அளவு கொண்ட திரையொன்று அமைக்கப்பட்டிருந்தது.

புலிகள் கடந்த காலத்தில் பொதுமக்கள் மீது மேற்கொண்ட படுகொலைத் தாக்குதல்கள் அடங்கிய விவரணப் படங்கள் அத்திரையில் தொடர்ச்சியாகக் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணி யானது நேற்றுக் காலை 9.30 மணியளவில் பொரளை கெம்பல் பூங்காவிலிருந்து ஊர்வலமாக கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தைச் சென்றடைந்தது.

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையிலிருந்து உயர் அதிகாரியொருவரை மேற்படி அமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்தித்து அவரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றுக் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணியளவில் நிறைவுபெற்றது. இச் சமயத்தில் பொரளையிலிருந்து கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத் திற்குச் செல்லும் பிரதான வீதிகள் ஒரு வழிப்பாதைகளாக்கப்பட்டிருந்தன.

பொரளையிலிருந்து கனத்தை வரை யிலான பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை மூடப்பட்டிருந்ததுடன் கனத்தை சுற்றுவட்டத்திலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்குச் செல்லும் பெளத்தாலோக மாவத்தை வீதி முற்றாக போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டிருந்தது.

நாட்டைப் பாதுகாக்கும் அமைப்புடன் சுயதொழில் புரிவோர் சம்மேளனம் உட்பட பல அமைப்புக்கள் இப்பேரணி யில் கலந்துகொண்டிருந்ததுடன் பெருமளவிலான பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.

ஊர்வலமாகச் சென்ற கண்டனப் பேரணி பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத் துக்குச் சுமார் 500 மீற்றர் தூரத்தில் நிறுத்தப்பட்டது.

அதற்கு அப்பால் செல்ல முடியாதவாறு வீதியின் குறுக்கே பாதுகாப்புத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு பெருமளவிலான பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டப் பேரணியினர் தடையை உடைத்துக் கொண்டு முன்னேற மேற் கொண்ட நடவடிக்கைகள் பொலிசாரால் தடுக்கப்பட்டன. அதனையடுத்து நாட் டைப் பாதுகாக்கும் அமைப்பின் முக்கி யஸ்தர்கள் ஐவர் மட்டும் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டு மகஜர் கையளிக்கப்பட்டது.

நேற்றைய இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் பெருமளவு ஊடகங்கள் செய்தி சேகரிப்பிற்காக வந்திருந்த போதும் உயர் ஸ்தானிகராலயத்திற்குள் ஊடகவியலா ளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்ற நாட்டைப் பாதுகாப்போம் செத்த புலிகளுக்கு மீண்டும் பால் ஊட்டுவதற்கு இங்கிலாந்து முயலக்கூடாது.

‘பிரிட்டிஷ் பிரதமரே பயங்கரவாதத்திற்கு துணை போக வேண்டாம்.’

‘நாட்டைப் பாதுகாக்க ஒன்றிணை வோம்’, ‘ஜனாதிபதியையும், பாதுகாப்புச் செயலாளரையும் பாதுகாக்க அணிதிரள் வோம்’ போன்ற கோஷங்கள் இந்த கண்டனப் பேரணியில் எழுப்பப்பட்டதுடன் தேசியக் கொடியுடன் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்களினதும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினதும் படங்கள் சிறிய ரக கட் அவுட் களும் இப்பேரணியில் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக் களின் தவறான தகவல்களை மேற்குலகிற் குத் தெளிவுபடுத்தி குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவுமாறு “நாட்டை பாதுகாப்போம்” அமைப்பின் இணைப்பாளர் மேஜர் ஜெனரல் எம்.ஆர். டபிள்யூ சொய்சா பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய உயரதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஜெனீவா பிரேரணைக்கு எதிரான கண்டனப் பேரணியின் இறுதியில் பிரிட்டிஷ் உயரஸ்தானிகராலயத்தில் உயரதிகாரியைச் சந்தித்து மகஜரொன்றைக் கையித்த பின் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணை சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்தவே இன்றைய இந்த எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்தோம்.

பேரணி ஊர்வலத்தின் முடிவில் நாம் கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராயலத்துக்குச் சென்று அங்கு உயரதிகாரியைச் சந்தித்து மகஜரொன்றைக் கையளித்தோம். சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நபர்கள் இலங்கையைப் பற்றி தவறான தகவல்களை வெளியிடுவதையே நோக்க மாகக் கொண்டுள்ளன.

இலங்கையிலிருந்து தலைமறைவாகிச் சென்ற புலிகள் அமைப்பினருடனும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடனும் இணைந்து அவர்கள் வழங்கும் தகவல் களையே உண்மையென நம்புகின்றனர்.

அவர்கள் வழங்கும் தகவல்கள் முற் றிலும் தவறானவை என்பதை நாம் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அதிகாரி களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம். நாம் வழங்கும் தகவல்கள் உண்மையானவை என்பதை தெளிவுபடுத்தினோம்.

எமது தகவல்களில் ஏதாயினும் சிறு குறைபாடுகள் இருந்தால், அவ்வாறு தவறு எனக்கருதும் பட்சத்தில் அது தொடர்பில் ஆதாரங்களை நாம் வழங்க முடியும் எனவும் கூறியுள்ளோம்.

“நாம் கல்விமான்கள் எம்மை நம்புங் கள். நாம் இந்த நாட்டுக்காகவே பேசு கின்றோம் இதனை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லுங்கள் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களிலிருந்து நாட்டை விடுவியுங்கள்” என பிரிட்டிஷ் உயர்ஸ்தானி கராலய உயர் அதிகாரியான பெண்மணி யிடம் கேட்டுக் கொண்டதாகவும் மேஜர் ஜெனரல் சொய்ஸா ஊடகவிய லாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த மகஜர் கையளிப்பையடுத்து நேற்றை இந்த கண்டனப் பேரணி நிறைவுற்றது.

No comments:

Post a Comment