Friday, March 2, 2012அர்பில்::ஈராக்கில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின்னர், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நாட்டின் பாதுகாப்பை ஏற்று வந்தனர். அதன் பின் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அரசு தனது படைகளை முற்றிலும் வாபஸ் பெற்றது. அதன்பின் ஈராக்கில் ஆங்காங்கே தீவிரவாத தாக்குதல்களும் வன்முறைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுலைமானியா மாகாணத்தில் அமெரிக்க ஆசிரியை ஜெரிமியா ஸ்மால் என்ற அமெரிக்க ஆசிரியை நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து மாகாண கவர்னர் முகமது சலீ கூறுகையில், ஆசிரியைக்கும் மாணவன் பெயார் அல் தலபானி என்பவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னிடம் இருந்து பிஸ்டலை எடுத்து ஆசிரியை மீது சுட்டுள்ளான் மாணவன். அதில் ஆசிரியை பரிதாபமாக இறந்துவிட்டார். தன்னையும் சுட்டுக் கொண்ட மாணவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் ரீதியாகவோ மத ரீதியாகவோ காரணம் கற்பிக்க கூடாது. விசாரணை நடந்து வருகிறது. இது சாதாரண குற்றச் செயல்தான்ÕÕ என்றார்.
No comments:
Post a Comment