Friday, March 2, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்-பிரதமரிடம் திமுக திட்டவட்டம்!

Friday, March 02, 2012
சென்னை::இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்றும், அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த திமுக எம்பி டி.ஆர். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் கருத்தை வலியுறுத்தினார்.

சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது என்பதை தவிர வேறு எந்தவிதமான நிலையையும் திமுக ஏற்காது என்றும் பிரதமரிடம் திமுக திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் இலங்கையை ஆதரிக்கக் கூடாது என அனைத்துத் தமிழக கட்சிகளும் கோரியிருந்தாலும், நடுநிலை வகிக்கிறோம் என்ற கேவலமான நிலையை இந்தியா எடுக்கக் கூடும் என்று தெரிகிறது. இதைத் தான் ஏற்க முடியாது என பிரதமரிடம் பாலு வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கருத்து அறிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன என்றும்,

ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக்கூடாது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment