Friday, March 2, 2012

நாம் இலங்கையின் எதிரி கிடையாது –அமெரிக்கா

Friday, March 02, 2012
இலங்கை::இலங்கையின் எதிரியல்ல என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் எவ்வாறான நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டாலும், இலங்கையுடனான இரு தரப்பு உறவுகள் தொடர்ந்தும் பேணப்படும் எனஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றிசீயா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான உறவுகளில் சில நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டுள்ளனஎன்பதனை மறுப்பதற்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தொடர்ந்தும் இலங்கையுடன் சுமூகமான உறவினைப் பேணமுயற்சிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும்ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சில காத்திரமான பரிந்துரைகளை உரிய முறையில்அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்படுவதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சில மிகச் சிறந்தபரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்தத்திட்டமிட்டுள்ளது என்பதனை அறிந்துகொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் நோக்கில் அமெரிக்க மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்தை சூழ்ச்சியாக கருதக் கூடாது என அவர்குறிப்பிட்டுள்ளார்.

சில விடயங்ளிகளில் அரசாங்கத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது,சில விடயங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வர்று திருப்தி அடையா முடியாத விடயங்கள் தொடர்பில் சர்வதேசநிறுவனமொன்றின் மூலம் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் நோக்கிலேயே, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைதீர்மானத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகிக்கின்றது என்றகுற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment