Friday, March 02, 2012இலங்கை::அமெரிக்காவும் ஐரோப்பாவும் யுத்தக் குற்றவாளிகளை பாதுகாத்து வருவதாக மின்வலுமற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட புலிகளைபாதுகாக்கும் நோக்கில் அமெரிக்காவும், ஐரோப்பாவும் நடவடிக்கை எடுத்து வருவதாகக்குறிப்பிட்டுள்ளார்.
க்ளோபல் தமிழ் போரம் போன்ற அமைப்புக்கள் பிரித்தானியபாராளுமன்ற வளாகத்தில் இலங்கைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட அந்நாட்டு அரசாங்கம்அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நடுகள்ஆகியன யுத்தக் குற்றவாளிகளுக்கு அரசியல் புகலிடம் வழங்கியுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
ருத்ரகுமாரன் மற்றும் நெடியவன் போன்றோருக்கு அமெரிக்காவும்,நோர்வேயும் ஏன் புகலிடம் வழங்கியுள்ளன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில்வடக்கிலிருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டமை அம்பலமாகியுள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சமூகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கியதேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் யுத்த காலத்தில் தமிழ்; மக்கள்கொல்லப்பட்டமை குறித்து மட்டுமே கவனம் செலுத்துகின்றது.
யுத்தத்தின் போது இடம்பெற்ற ஏனைய விடயங்கள் தொடர்பில் இவர்கள்கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment