Tuesday, March 20, 2012பொன்னேரி::மீஞ்சூர் ஒன்றிய பாஜ சார்பில், இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான அந்நாட¢டு அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும், மாணவர்கள், மக்கள், வியாபாரிகளை பாதிக்கும் தொடர் மின் வெட்டை கண்டித்தும் பொன்னேரி பஜாரில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மீஞ்சூர் ஒன்றிய தலைவர் அன்புநிதி, மாவட்ட செயலாளர் ராஜமார்த்தாண்டம், மாவட்ட விவசாய அணி செயலாளர் எஸ்.எம். பாபு, ஒன்றிய துணை தலைவர் இளங்கோவன், பொன்னேரி நிர்வாகி ராஜேஷ் முன்னிலை வகித்தனர். மீஞ்சூர் ஒன்றிய பொதுச்செயலாளர் குமார் வரவேற்றார். மாநில துணை தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர்.எம்.ஆர். ஜானகி ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் தேவதாஸ், மாவட்ட பிரசார அணி தலைவர் மீஞ்சூர் செல்வம், ஒன்றிய நிர்வாகிகள் தினேஷ், நந்தன், ராஜசேகர், கார்த்திக், பிரபாகரன், கருணாநிதி, வேலாயுதம், கோதண்டம், கிருஷ்ணமூர்த்தி, தனபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சோழவரம் ஒன்றிய பொது செயலாளர் குணபூஷனம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment