Tuesday, March 20, 2012

இந்தியா தனது முட்டாள் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது: ஒரு தடவை புலிகளுக்கு பால் ஊட்டி வளர்த்து ரஜீவ்காந்தியை பலி கொடுத்தது-குணதாச அமரசே

Tuesday, March 20, 2012
இலங்கை::இந்தியாவின் முட்டாள் தனத்திற்கு எல்லையே இல்லை. இனி ஒரு நிமிடமேனும் பொறுக்காது இந்தியாவை இலங்கையிலிருந்து அடியோடு தூசு தட்ட வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இந்தியாவை நம்ப வேண்டாம் என்று அழுது புலம்பினோம். ஆனால் அரசாங்கம் கேட்கவில்லை. நாங்கள் கூறியவை செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே காணப்பட்டது. ஆனால் தற்போது தான் அரசாங்கம் விழித்துக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக குணதாச அமரசேகர தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கை அரசாங்கத்தை பல முறை வலியுறுத்தி வந்தோம். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு நாம் கூறியதை கணக்கிலெடுக்கவில்லை. இந்தியா இதுவரை காலமும் இரட்டை வேடத்தையே போட்டது. இலங்கை தொடர்பில் பாரிய காட்டிக் கொடுப்பொன்றை இந்தியா செய்து விட்டுள்ளது. அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிப்பது என்பது இலங்கையை இந்தியா காட்டிக் கொடுத்து விட்டது என்றே அர்த்தம்.

ஒரு வகையில் இந்தியா தனது முட்டாள் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது. ஒரு தடவை புலிகளுக்கு பால் ஊட்டி வளர்த்து ரஜீவ்காந்தியை பலி கொடுத்தது. தற்போது அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்கி பேராபத்திற்குள் விழுந்துள்ளது எனக் கூறினார்.

No comments:

Post a Comment