Tuesday, March 20, 2012இலங்கை::இலங்கை விவகாரத்தில், மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமிப்பதே அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள யோசனையின் உண்மையான நோக்கம் என தெரியவந்திருப்பதாக திவயின கூறியுள்ளது.
ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் ஐலின் போகன், வெளிநாட்டு தூதுவர்களுக்கு வழங்கிய விருந்துபசாரம் ஒன்றில் இது குறித்து தெரிவித்துள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது யோசனை நிறைவேற்றப்படும் எனவும் இதன் பின்னர், சகல அதிகாரங்களுடன் நவநீதம் பிள்ளைக்கு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த முடியும் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment