Tuesday, March 20, 2012இலங்கை::கட்டுநாயக்க - ஆடிஅம்பலம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நேற்றிரவு 9.30 அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மோட்டார் சைக்கிளிலிருந்து வருகை தந்த இனந்தெரியாதோர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மஹவ - தலத்தாகம விஹாரை சந்தியில் வசிக்கும் 32 வயதான நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நபரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment