Tuesday, March 20, 2012

புலிகளின் கோரிக்கைக்கு அமைய அமெரிக்கா ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை தாக்கல் செய்துள்ளது-அமைச்சர் விமல் வீரவன்ச!

Tuesday, March 20, 2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக தமது தாளத்திற்கேற்ப அரசியல் ஆட்டம் போடும் கைபொம்மை அரசொன்றை ஆட்சியில் அமர்த்தி அதனூடாக மீண்டும் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான சதிமுயற்சிகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜனசெவன வீடமைப்புத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட பயனாளிகளுக்கு வீடமைப்பதற்கான காசோலைகள், வீட்டு உறுதிப்பத்திரங்கள் மற்றும் கூரைத்தகடுகள் வழங்கும் வைபவம் கடந்த வியாழக்கிழமை அம்பாறை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதித்தலைவர் ஏ.ஜயந்த தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே புலி பிரிவினைவாத சக்திகள் ஈழக்கொடியையும், அமெரிக்க கொடியினையும் ஏந்தியே ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் இருந்தே ஏகாதிபத்தியவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்குமிடையே உறவு என்னவென்று மிகவும் தெளிவாகத் தென்படுகின்றது.

புலிக்காக அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எமக்கு எதிராக சதிமுயற்சிகளை முன்னெடுத்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வெளிவந்துள்ளது.

எமது நாட்டில் மீண்டும் தீவிரவாதத்தை தோற்றுவிப்பதற்கான தேவைப்பாடு அந்நாடுகளுக்கு உள்ளது.

புலிகளின் கோரிக்கைக்கு அமைய அமெரிக்கா ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை தாக்கல் செய்துள்ளது. வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. மீண்டும் புலிகள் அமைப்பினை வடக்கில் கட்டியெழுப்பும் நோக்கிலேயே ருத்திரக்குமார் உள்ளிட்ட சர்வதேச வலைப்பின்னல் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு சர்வதேசத்தின் ஊடõக அழுத்தம் கொடுக்கின்றனர். வடக்கில் இராணுவத்தினை அகற்றினால் மனித உரிமைகள் கட்டிக் காக்கப்படுமா என நாம் அமெரிக்காவிடம் கேட்க விரும்புகின்றோம்.

நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் உள்ளது, அப்படியாயின் வடக்கில் மட்டும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு அமெரிக்கா வலியுறுத்துவது ஏன்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினை அமர்த்தியது அமெரிக்க மக்கள் என்று அந்நாடு நினைத்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை. அமைச்சரவைக் குழுவைவிட நாட்டு மக்களே தனக்கு பெரியது. இலங்கை விரைவில் பற்றிய எரியவேண்டும் என்பது இலங்கைக்கான முன்னாள் அமெரிக்காவின் தூதுவர் ரொபட் ஓ பிளேக்கின் ஆசையாகவுள்ளது.

இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர் பீ. தயாரட்ண, பாராளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரம, அரசாங்க அதிபர் நீல் த அல்வில், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment