Tuesday, March 20, 2012

தலை துண்டித்து 10 பேர் படுகொலை விசாரிக்க சென்ற 12 போலீஸ் சுட்டு கொலை!

Tuesday, March 20, 2012
மெக்சிகோ சிட்டி::மெக்சிகோவில் போதை கடத்தல் கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 10 பேர் தலையை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டனர். இதுபற்றி விசாரிக்க சென்ற 12 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் அதிகளவில் நடக்கிறது. ஏகப்பட்ட கும்பல்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றன. ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.47 லட்சம் கோடிக்கு போதை கடத்தல் நடப்பதாக கூறப்படுகிறது. பல கோடி புழங்கும் பிசினஸ் என்பதால் கும்பல்கள் இடையே மோதல்களும் சகஜம். போதை கடத்தல் கும்பல்கள் இடையிலும் போலீசுடனும் கடந்த 6 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத போர் போலவே மோதல்கள் நடந்து வருகின்றன. கிறிஸ்தவ மத தலைவர் போப்பாண்டவர் விரைவில் மெக்சிகோ வருவதையொட்டி, இப்போதைக்கு மோதலை நிறுத்துவதாக போதை கடத்தல் கும்பல்கள் சமீபத்தில் ‘போர் நிறுத்த’ அறிவிப்பை வெளியிட்டன. இந்த நிலையில், கெரரோ மாநிலம் டெலோலோபான் நகரில் உள்ள இறைச்சி கூடத்தின் அருகே 3 பெண்கள் உள்பட 10 பேரின் தலைகள் துண்டித்து வைக்கப்பட்டிருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகே சில வாசகங்களை கொலையாளிகள் எழுதி வைத்திருந்தனர். ‘லா பமிலியா போதை கடத்தல் கும்பலுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு இதுதான் கதி’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. நைட்ஸ் டெம்ப்ளர் என்ற கும்பலை சேர்ந்தவர்கள்தான் இந்த படுகொலையை செய்தனர் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விசாரிக்க டெலோலோபான் பகுதிக்கு போலீசார் சென்றனர். அவர்களை போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிவளைத்து சரமாரியாக சுட்டனர். இதில் 12 போலீசார் பலியாயினர்.

No comments:

Post a Comment