Saturday, March 24, 2012

பொலிஸாரால் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

Saturday, March 24, 2012
இலங்கை::மதுபோதையுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை ஜம்பட்டா வீதி பொலிஸ் காவலரணில் சேவையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.

இந்த இன்ஸ்பெக்டர் நேற்றிரவு 9.30 அளவில் ஜம்பட்டா பொலிஸ் காவலரணில் சேவையிலிருந்த உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர், கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் களுத்தறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் சேவையாற்றுவதாக தெரியவந்துள்ளதுடன், அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.

No comments:

Post a Comment