Saturday, March 24, 2012இலங்கை::ஜ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்று யாழ் அரச அதிபரிடம் ஆலேசனை பெற்ற கனடா நாட்டு பாரளுமனறக் குழு இதுவரை காலமும் தீர்க்கப்படாத தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நேற்று யாழ்மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட கனடா நாட்டு பாரளுமன்ற உறுப்பினர்களான வோன் வைற், கிறிஸ் அலக்சான்டர் ஆகியோரைக் கொண்ட குழுவினர் யாழ் அசர அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை மாலை 5 மணியளவில் எக்ஸ் போ விடுதியில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டடுள்ளனர் இச் சந்திப்பின் போதே மேற்படி விடையம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜெனீவாவிலுள்ள ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் அனைத்து நாடுகளின் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றுப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தினை தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்? இத் தீர்மானம் தொடர்பாக தமிழ் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள்? இத் தீர்மானம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக யாழ் மாவட்ட அரச அதிபர் என்ற ரீதியில் உங்களுடைய கருத்து என்ன? என்று ஆலோசனை பெற்றுள்ளதுடன், யாழ் அசர அதிபருடைய கருத்துக்களையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
யுத்தத்திற்கு பின்னர் மக்களுடைய மீள் கட்டுமானம் எவ்வாறு அமைந்துள்ளது? மக்களுடைய மீள்கட்டுமானத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு எந்தவையில் அமைந்துள்ளது? அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் உதவித்திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றதா? இவர்களால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் மக்களுக்கு போதுமானதாக உள்ளதா? மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றதா? இதுவரை காலமும் தீர்க்கப்படாத மக்களுடைய பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா? அப் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு என்ன காரணம்?
மக்களுடைய மீள்குடியேற்றம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா? மீள்குடியேற்றம் முழுமைப்படுத்த முடியாமைக்கு என்ன காரணம்? யாழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு இராணுவத்தினர் எந்த வகையில் உதவிகளை வழங்குகின்றனர்? மக்களுடைய மீள்கட்டுமானத்திற்கு இராணுவத்தினர் உதவிகள் வழங்குகின்றார்களா? சமூகத்தில் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளை அரச அதிபரிடம் கோட்டு இக் கேள்விகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இவ் விடையங்கள் தொடர்பாக கலந்துரையாடலினை மேற்கொண்டுள்ள மேற்படி கனடா நாட்டு பாரளுமன்றக் குழு இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுது தொடர்பாகவும் அரச அதிபரிடம் ஆலேசனை பெற்றுச் சென்றுள்ளனர்.
யாழ் அரச அதிபருடன் சந்திப்பினை நிறைவு செய்து கொண்டு, மேற்படிக் குழு யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்றல் மகிந்த ஹத்துறுசிங்கவினையும் சந்தித்து கலந்துரையாடலினை நடத்தியுள்ளது.
No comments:
Post a Comment