Saturday, March 24, 2012சென்னை::அரசு வெளியிட்ட அறிக்கை: காவல் துறை அதிநவீனமயமாக்கப்படுதல் மற்றும் காவலர்களின் நலன்களுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிக்கு 5 கோடியே 55 லட்சம் 87 ரோந்து வாகனங்களை வாங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் துறை ஆணையராக மத்திய குற்றப்பிரிவுக்கு கூடுதலாக ஒரு காவல் துறை துணை ஆணையர், 2 காவல் உதவி ஆணையர், 9 காவல் ஆய்வாளர், 46 காவல் உதவி ஆய்வாளர், 10 தலைமை காவலர், 20 முதல் நிலை காவலர், 30 2ம் நிலைய காவலர், ஒரு சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 119 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அரசுக்கு தொடர் செலவினமாக ரூ.5 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 769, தொடரா செலவினமாக ^86 லட்சத்து 61 ஆயிரத்து 335 ஏற்படும். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தமிழ் பல்கலை கழகம் அருகே ^4 கோடியே 81 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கிரிவலம் மற்றும் கார்த்திகை தீப திருவிழா போன்றவற்றுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். இந்த காலங்களில் பாதுகாப்புக்கு வெளி மாவட்ட போலீசார் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நலன் கருதி ரூ.11 கோடியே 33 லட்சம் செலவில் 500 காவலர்கள் தங்குவதற்கான படை குடியிருப்புகள் கட்டவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படையில் புதியதாக பணி அமர்த்தப்பட்டுள்ள 2ம் நிலை காவலர்களுக்கு, காவலர் உயர்ரக பயிற்சி பள்ளியில் 7 மாதங்கள் பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ள முதல்வர், காவல்துறை பணி சிறக்க, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு 245 கம்ப்யூட்டர்கள், மாவட்ட தலைமை காவல் அலுவலகங்களுக்கு 330, சரக அலுவலகங்களுக்கு 60, மண்டல அலுவலகங்களுக்கு 16, மாநகர காவல் அலுவலகங்களுக்கு 70, ஆயுதப்படை தலைமை அலுவலகங்களுக்கு 5, ஆயுதப்படை சரக அலுவலகங்களுக்கு 10,தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 64, காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு 100, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு 100 என மொத்தம் ரூ.5 கோடி செலவில் 1000 கம்ப்யூட்டர்கள் வாங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள 1492 காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அமர்வதற்காக காவல் நிலையம் ஒன்றுக்கு 10 பிவிசி நாற்காலிகள் வாங்குவதற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். போடியில் அரசு பொறியியல் கல்லூரி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி புதியதாக தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பொறியியல் கல்லூரி போடிநாயக்கனூர் வட்டம், மேல் சொக்கநாதபுரத்தில் 2012,13ம் கல்வி ஆண்டு முதல் செயல்பட தொடங்கும்.
No comments:
Post a Comment