Thursday, March 22, 2012

து‌ப்பா‌க்‌கியுட‌ன் பீகாரை சே‌ர்‌ந்த ‌ச‌த்‌தியபாமா க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 8 பே‌ர் கைது!

Thursday, March 22, 2012
செ‌ன்னை::செ‌ன்னை‌யி‌ல் து‌ப்பா‌க்‌கியுட‌ன் ‌பீகாரை சே‌ர்‌ந்த 8 மாணவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். 8 பே‌ரு‌ம் ச‌த்‌தியபாமா பொ‌றி‌‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் படி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

செ‌ன்னை அடு‌த்த ஈ‌ஞ்ச‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ஒரு த‌னி ‌வீ‌ட்டி‌ல் வடமா‌நில‌‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் இரு‌ப்பதாக ‌நீல‌ா‌ங்கரை காவ‌ல்துறை‌க்கு ரக‌சிய தகவ‌ல் வ‌ந்தது.

இதையடு‌த்து ந‌ள்‌ளிர‌வி‌ல் அ‌ந்த ‌வீ‌ட்டை த‌னி‌ப்படை‌யின‌ர் சு‌ற்‌றி வளை‌த்து அ‌திரடி சோதனை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது அ‌ங்‌கிரு‌ந்த 8 பேரை ‌பிடி‌த்த கா‌வ‌ல்துறை‌யின‌ர் அவ‌ர்க‌ளி‌ட‌ம் இரு‌ந்து 2 து‌ப்பா‌க்‌கி, 8 தோ‌ட்டா‌‌க்களை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

விசாரணை‌யி‌ல், ‌பீகா‌ரை சே‌ர்‌ந்த மாணவ‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரியவ‌ந்தது. செ‌ன்னை ச‌த்‌தியபாமா பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் அவ‌ர்க‌ள் படி‌த்து வருவதையு‌ம் கா‌வ‌ல்துறை‌யின‌ர் உறு‌தி செ‌ய்து‌ள்ளன‌ர்.

பிடி‌ப்ப‌ட்ட 8 பே‌ரிடமு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

No comments:

Post a Comment