Thursday, March 22, 2012

இலங்கை நிலைமைகள் குறித்து சுயாதீனமான ஆராயப்படும் - கனடா!

Thursday, March 22, 2012
இலங்கையின் நிலைமைகள் குறித்து சுயாதீனமான ஆராயப்பட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்காணிப்பின் பின்னர் இலங்கை தொடர்பான அடுத்த கட்ட தீர்மானங்களை கனடா எடுக்கும் என குறிப்பிடப்படுகிறது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே கனடாவின் நிலைப்பாடு என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment