Friday, March 23, 2012

கூடங்குளம் விவகாரம்: கைதான சீமான், வைகோவை, விடுவிக்கக் கோரி கோவையில் மறியல் போராட்டம்- மதிமுகவினர் 75 பேர் கைது!

Friday, March 23, 2012
கோவை::சிறையிலிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தி.க. தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை விடுவிக்கக் கோரி கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு கோவை மாவட்ட மதிமுக செயலர் மோகன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது எனவும், வைகோ மற்றும் கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோவை மாவட்ட மதிமுக செயலாளர் மோகன் உட்பட மறியலில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்தனர்.

இதனால் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment