Friday, March 23, 2012

கட்டுவன்வில கிராமத்தில் மோதல்; 15 வாகனங்களுக்கு சேதம்!

Friday, March 23, 2012
இலங்கை::கல்முனை பிரதேசத்திலிருந்து சமய நடவடிக்கைகளுக்காக சென்ற சிலருக்கும் வெலிகந்த கட்டுவன்வில கிராம மக்களுக்கும் இடையில் இன்று மதியம் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது 15 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பின்னர் அந்த பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டிவரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வெலிகந்த வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, மோதலில் காயமடைந்த ஒருவர் சிகிச்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment