Friday, March 23, 2012

இலங்கையின் மத்தியஸ்தத்தை வரவேற்கும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

Friday, March 23, 2012
இலங்கை::மாலைதீவில் தற்போது நிலவும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கையிகன் மத்தியஸ்தத்தை வரவேற்பதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள உயர்மட்ட குழுவினரிடம் கலந்துரையாடுவதற்காக நஷீட் நேற்றைய தினம் நாட்டிற்கு வருகைத்தந்திருந்தார். மாலைதீவின் முன்னாள் ஜனாபதி இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தின் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி உட்பட பல்வேறு முக்கிய அரசியல்வாதிகளை இன்று நஷீட் சந்தித்துள்ளார்.

No comments:

Post a Comment