Friday, March 2, 2012

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 2 ஆயிரம் பேருக்கு 2 1/2 இலட்சம் ரூபா வீதம் சுயதொழில் கடன்!

Friday, March 02, 2012
இலங்கை::புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 2 ஆயிரம் பேருக்கு 2 1/2 இலட்சம் ரூபா வீதம் சுயதொழில் கடன் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், பிரதேச செயலாளர்களின் சிபார்சுப் படி சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்ட 2000 பேர் இதற்காக தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் கைதான மற்றும் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் 10,375 பேர் புனர் வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். 765 பேர் மட்டுமே எஞ்சியுள்ளதோடு இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment