Friday, March 02, 2012இலங்கை::சனல் 4வினால் வெளியிடப்படவுள்ள இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பிலான ஆவணப்படம் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரைவ முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவையின் பதில் பேச்சாள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தண இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய செய்தியாளர் மாநாட்டில் சனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது
சனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படம் தொடர்பில் எங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. சனல் 4 இதற்கு முன்னர் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் பிரபல பகுப்பாய்வாளர்களைக் கொண்டு நாம் சுயாதீனமான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளோம்.
இந்த அறிக்கையின்படி குறித்த வீடியோ காட்சியானது கணனி தொழிநுட்பத்தைப் பயண்படுத்தி இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் போலியாக தயாரிக்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சனல் 4 வின் நம்பதக்தன்மை குறித்து சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளதுடன், அதன் ஏற்றுக்கொள்ளும் தன்மை முற்றாக இல்லாது போயுள்ளது.
ஆனாலும் அதன் பின்னர் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. அந்த ஆவணப்படத்தை நாம் சர்வதேச நாடுகளுக்கு கொடுத்தோம். அந்த வீடியோ காட்சி இலங்கையிலும் வெளியிடப்பட்டது.
அதுமாத்திரமின்றி சனல் 4 வின் ஆவணப்படத்திற்கமைய காணாமல் போன நபர்கள் யார்?, கொல்லப்பட்ட நபர்களின் பெயர் விபரங்கள் என்ன?, எங்கு வைத்து கொல்லப்பட்டார்கள், என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவோ, உறுதிபடுத்தவோ அவர்களால் முடியவில்லை.
ஆனால் நாம் சனல் 4 தயாரித்த ஆவணப்படம் திரிபுபடுத்தப்பட்ட பொய்யானதொரு ஆவணப்படம் எனப்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே சனல் 4 நாளை எதைச் சொன்னாலும் எமக்கு பிரச்சினை இல்லை. ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சனல் 4 இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றமை யாவரும் அறிந்த ஒன்றே.
இந்நிலையில் அவர்கள் எந்த ஆவணப்படத்தை வெளியிட்டாலும் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார்.
No comments:
Post a Comment